டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு தொடருந்து தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீகாரில் உள்ள ரகுநாத்பூர் தொடருந்து நிலையம் அருகே நேற்று(11.10.2023) இரவு சுமார் 9.35 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர் எனவும் மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், காயம் அடைந்த பயணிகளை மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.