தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் குவைட்டில் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
‘பீஸ்ட்’ திரைப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
ஏற்கனவே தமிழில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘எஃப்ஐஆர்’ மற்றும் மலையாளத்தில் வெளியான துல்கர்சல்மானின் ‘குரூப்’ ஆகிய திரைப்படங்களுக்கும் குவைட் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.