புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அந்த வகையில் புகையிரதத்தில் பயணம் செய்பவர்களில் புகையிரத சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புகையிரத சேவைக்காக பெருந்தொகை பணம் செலவிடப்படும் நிலையில் இது தொடர்பில் புகையிரத பயணிகளும் அக்கறை காட்ட வேண்டும். எனினும் சிலர் புகையிரத சொத்துக்களை சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு எதிராக பொது சொத்தினை சேதப்படுத்தியமை, தொடர்பிலான சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் இதனை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.