புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சுங்க கட்டளைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த சட்டத்தை திருத்தம் செய்ய எந்தவொரு தேவையும் இல்லை என, கூட்டமைப்பின் உப தலைவர் லால் வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினரின் தேவைக்கு அமைய சுங்க கட்டளைச் சட்டத்தில் மாற்றத்தை மேற்கொள்ள தயாராகி வருவதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையில், இன்று பகல் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், லால் வீரக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்