புதிதாக பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்

0
34

இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சுவாச தொற்றை ஏற்படுத்தும்
சுவாச தொற்றுடன் கூடிய HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த வைரஸின் தாக்கம் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை.

HMPV வைரஸ் அமெரிக்க உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளில் அதிகளவு பரவி வருவதாக அந்த அமைச்சின் கொவிட்-19 நோய் தொற்று தொடர்பான பிரதான ஒழுங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் காணப்படக்கூடிய இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சுவாச தொற்றை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அது தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகளும் அதிக அவதானத்துடன் செயற்படுவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here