நாட்டில் பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டணங்கள், நேற்று(16) முதல் அமுலுக்கு வருவதாக, போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஆகக் குறைந்த பேரூந்து கட்டணமான 10 ரூபாயில், எந்தவொரு மாற்றமும் எற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.