கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்டுங்களை விட தற்போதய ஜனாதிபதி தோழர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் கொண்டு வந்து வரவு செலவு திட்டம் மிகவும் முன்னேற்றகரமான வரவேற்க தக்க வரவு செலவு திட்டமாக நாங்கள் கருதுகிறோம்.இந்த வரவு செலவு திட்டம் முன்னர் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் வயிற்றில் புளி கரைத்துள்ளது என்றே கூற வேண்டும். பல தசாப்த காலமாக இலங்கையில் கொண்டு வந்த வரவு செலவு திட்டங்கள் அவர்களே கொண்டு வந்து அவர்களே அதன் நலனை அனுபவித்தார்கள.;
இன்று அவவாறு இன்றி மக்கள் நல வரவு செலவு திட்டம் ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மலையக அபிவிருத்திக்கென பாரிய அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரும் அகில இலங்கை இந்து மஹா சபா தலைவருமான வேலு சிவஸ்ரீ சுரேஸ்;வர சர்மா தெரிவித்தார்.
கொட்டகலை கொமர்சல் பகுதியில் இன்று மாலை 20.02.2025 அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த வரவு செலவு திட்டத்தில் தோட்டப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் சுகாதார துறையினை விருத்தி செய்வதற்கும் என்றுமில்லாதவாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாத்திரமன்றி பல்கலைக் கழகம் முதல் கலை கலாசாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் இந்த வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கு எந்த அரசு முன்னுரிமை கொடுக்கின்றதோ அந்த அரசாங்கமும்; அந்த சமூகம் முன்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவே இந்த வரவு செலவு திட்டம் ஒட்டு மொத்த கல்வியலாளர்களுக்கும் மலையக மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
நாட்டின் ஜனாதிபதி மிகவும் நிதாமாக வறுமையின் பிடியில் சிக்கிய நாட்டினை மீட்பதில் செயப்படுவார் என்ற நம்பிக்கை எம்மத்தியில் உள்ளது. இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கின்றது இந்த நாட்டினை கௌரவ ஜனாதிபதி அவர்கள் முன்னேற்ற வேண்டும்.அதே நேரம் வரவு செலவு திட்டத்தில் எவ்வாறு நீங்கள் களைஞர்களுக்கு உதவி செய்ய முன்வந்தீர்களோ அதே போன்று மலையக இந்து கருமார்களுக்கு உதவ முன்வர வேண்டும் மலையகத்தில் இது வரையிலும் ஒரு வேத பாடசாலை இல்லை இது தொடர்பாகவும் கவனமெடுக்க வேண்டும் என அவர் இதன் போது கேட்டுக்கொண்டார்.
மலைவாஞ்ஞன்