புதிய வருடத்திலாவது பிச்சை எடுக்காது இருங்கள் – சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

0
86

இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் இலங்கை தற்போது வரை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது என்று கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில் தேசத்தின் நலனுக்காக அனைத்து பிரஜைகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும். அதற்காக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

புதிய கட்டமைப்பை உருவாக்கத் தவறினால் நாடு அழிந்துவிடும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரித்துள்ளார்.இதற்கு காலங்காலமாக தேசத்தை ஆட்சி செய்தவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே காரணம்” என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here