புத்தகத்தை பிடுங்கி அதிலிருந்து தாள்களை கிழித்து வீசிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புறக்கோட்டை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் இணைந்ததாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் வசமிருந்த தற்காலிக சாரதி அனுமதி வழங்கும், புத்தகத்தை அபகரித்து அதிலிருந்த தாள்களை கிழித்து வீசினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை டைட்டஸ் கட்டிடத்துக்கு அருகில், கடமையில் இருந்த போது, தடை செய்யப்பட்ட பிரதேசத்தில் வாகனத்தை நிறுத்தி இருந்ததாக கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது சாரதி எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாரானபோது, சாரதியின் மனைவியான ஆசிரியர், அந்த பொலிஸ் அதிகாரியின் வசமிருந்த தற்காலிக சாரதி அனுமதி வழங்கும், புத்தகத்தை அபகரித்து பக்கங்களை கிழித்து வீசியெறிந்து மிகவும் ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலையைச் சேர்ந்த 53 வயதான ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.