ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து சகோதர முஸ்லிம் மக்கள் உண்ணாவிரதம் இருந்து புனித நோன்பை கடைபிடித்து வந்தனர். அந்த நோன்பின் பயன் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தனது ரமழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த புனித நாளில் நம்மிடையே சகோதரத்துவம் மேலும் வலுப்பெற்று சமுதாய ஒற்றுமை நீடித்து நிலைக்க வாழ்த்துகிறேன். இலங்கை வாழ் முஸ்லிம்கள் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நல்லாட்சியில் புது நம்பிக்கையுடன் ரமழான் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கின்றது.
இந்த நோன்பு பெருநாள் மனிதன் தன் ஐம்புலன்களையும் அடக்கி, மனதை ஒருநிலைபடுத்தி, ஆன்மாவுடன் லயித்து வாழும் பக்குவத்தை வெளிப்படுத்துகின்றது.
கோபம், போட்டி, பொறாமை போன்ற தீய எண்ணங்கள் மனதிலிருந்து விலகி சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் சக மனிதர்களோடு, சக சமூகத்தினரோடும் வாழ்வதற்கான நன்நெறிகளை போதிக்கின்றது.
இந்நாளின் உன்னதத்தை போற்றும் வழியாக சகலமே வாழ வேண்டும். அதன் மூலமாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.