புற்றுநோயாளர்களுக்கு வரையறையின்றி நிதியை செலவிட நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புற்றுநோயாளர் ஒருவருக்கு இதுவரை அரசாங்கம் 15 இலட்சம் ரூபாய் நிதி செலவிட்டதாக, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், இதுபோன்று வரையறை விதிக்கப்பட்டுள்ளமையால், குறைந்த வருமானம் பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ள, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இந்த வரையறைகளை நீக்கி, நோயாளி உயிர்வாழும் வரை, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை, இலவச சுகாதார சேவையூடாக வழங்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.
இதன்படி, விரைவில் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும், அமைச்சின் செயலாளருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.