புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி கிடைக்காதோர் தொடர்பு கொள்ளலாம்!

0
135

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான நுழைவு அனுமதிபத்திரம் கிடைக்க பெறாதவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொண்டு முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யூ எம்.என் ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2 ஆயிரத்து 959 நிலையங்களில் இடம்பெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக 3 லட்சத்து 50 ஆயிரத்து 701 பரீட்சார்திகள் தோற்றவுள்ளனர்.

இந்தநிலையில், இதுவரை நுழைவு அனுமதிபத்திரம் கிடைக்க பெறாதவர்கள் 0112 784208, 0112 784537, 0113 1883 50, 0113140314 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here