புலமைப்பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா?

0
21

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (18) தெரிவித்தார். பரீட்சை தொடர்பான வினாத்தாளில் சில வினாக்கள் முன்னதாக கசிந்துள்ளதாகக் கூறி நீதி வழங்குமாறு கோரி பெற்றோர்கள் மற்றும் சிலர் நேற்று (18) காலை பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் குழுவொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தாம் இதனை தாம் அவர்களுக்கு தெரிவித்ததாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் மூன்று வினாக்கள் மாத்திரமே கசிந்துள்ளதாக கலந்துரையாடலுக்கு வந்திருந்த குழுவினர் தெரிவித்ததாகவும், ஆனால் பல ஆசிரியர்களினால் அதிக கேள்விகள் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு வந்தவர்களின் தகவல்கள் மூன்று நாட்களுக்குள் சரியானவை என நிரூபிக்கப்பட்டால் இலங்கை பரீட்சை திணைக்களம் இது தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமென அவர் மேலும் தெரிவித்தார்.

16 வினாக்கள் கொண்ட தாள் விவாதத்தில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகவும், மூன்று கேள்விகளில் மாத்திரம் ஒற்றுமை இருப்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறு கோரி நேற்று (18) தாய்மார்களும் ஏனையவர்களும் பரீட்சை திணைக்களத்திற்கு வந்து பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு புலமைப்பரிசில்களை எதிர்கொண்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்ததாகக் கூறப்படும் மூன்று வினாக்கள் விடைத்தாள்களைக் குறிக்கும் போது விடுபடுவதற்கு இந்தக் குழு எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், இந்த அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவொன்று அதிகாரிகளிடம் எழுத்து மூலமான மனுவை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

போராட்டம் காரணமாக பொலிஸார் மற்றும் கலவர தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். பின்னர், இந்தக் குழுவின் ஒரு பகுதியினர் மற்றும் பரீட்சை ஆணையாளருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதுடன் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். எது எப்படியோ புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் உள்ள சில வினாக்களுக்கு நிகரான வினாக்கள் அடங்கிய நடைமுறை தாள் ஒன்று அலவ்வ பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரால் பரீட்சைக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டது. . அனுராதபுரத்திலும் வினாத்தாள் பிரச்சனை இருந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பரீட்சைகள் திணைக்களத்தினர் விசாரணை நடத்தினர்.

வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மூன்று வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் செவ்வாய்க்கிழமை (17) தீர்மானித்திருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here