புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான தகவல்!

0
116

2023 ஜனவரியில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருவதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இந்த மாதம் 18 ஆம் திகதி நடைபெற்றது.

2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு 3 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here