ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் வெளியாக உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (14.10.2024) காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் திருத்தபணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டும் இருந்தன.புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சை விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.