புலிகள் அமைப்பின் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது!

0
159

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாகவும் இதனால் தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

2015ம் ஆண்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு செயற்பட்டு வருவதாகவும் இதனால் தடையை நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச தொடர்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களைப் பயன்படுத்தி வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா போன்ற நாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்யவும், நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் ஊடாக நிதி கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா ராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here