புளியாவத்தை நகரில் சதோச நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக நோர்வூட் பிரதேச சபை உபதலைவர் கிஷோகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் புளியாவத்தை பகுதியை பொறுத்த வரை பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 90 வீதமானவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள். இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அவர்கள் அரசினால் வழங்கப்படும் நிவாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக அட்டன் நகரில் உள்ள சதோச வியாபார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதுமட்டுமல்லாது நகர கடைகளை விட பொருட்களின் விலை சற்று குறைவாக சதோச நிறுவனத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அட்டன் நகருக்கு செல்வதன் ஊடாக பிரதேச மக்கள் போக்குவரத்துக்காக பெருமளவு பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் அதன் விளைவாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்களை எமது பிரதேச மக்கள் பெறுவது துரதிஷ்டமான விடயமாக உள்ளதினால், இது தொடர்பாக நோர்வூட் பிரதேச சபை உபதலைவர் என்ற ரீதியிலும் புளியாவத்தை வட்டார பொறுப்பாளர் என்ற ரீதியிலும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக அறிவித்திருந்ததாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் துறை சார் அமைச்சர் நளின் பெர்னாந்துக்கு புளியாவத்தை நகரில் சத்தோச விற்பனை நிலையத்தை அமைக்க மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புறை விடுக்கபட்டுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை உபதலைவர் கிஷோகுமார் தெரிவித்தார்.
நீலமேகம் பிரசாந்த்