புஸ்ஸலாவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று பிரச்சனைக்கு உட்பட்டவர்களுக்கு உதவும் நடமாடும் சேவை!

0
227

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் அதிலும் விசேடமாக வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இடைத்தரகர்களாக ஏமாற்றப்படுதல், மத்திய கிழக்கில் வேலை செய்யும் வீடுகளில் துன்புறுத்தப்படுதல், துன்புறுத்தல் தாங்க முடியாமால் அந்த வீடுகளில் இருந்து தப்பியோடி தூதரகத்தில் தஞ்சமடைதல், ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் திருப்பி அனுப்பாமல் வீட்டு எஜமானர்களால் தடுத்து வைக்கப்படுதல்.
நீண்ட காலம் வீட்டாரோடு தொடர்புகள் இல்லாத நிலையில் இருத்தல், காணமால் போகுதல், சம்பளம் முறையாக கிடைக்காமை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறனவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெற வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும். ஆனால் பலருக்கு இவ்வாறு முறைப்பாடு செய்யும் முறை தெரியாதிருத்தல், முறைபாடு செய்யும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய தெளிவு இல்லாமை என்பவற்றால் முறைபாடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காக நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நடமாடும் சேவையில் பங்குபற்றுபவர்களின் முறைப்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு சமர்ப்பித்து உகந்த நடவடிக்கை மேற்கொள்ள பிரிடோ உதவி செய்யும்.

நடமாடும் சேவை இம்மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக் கிழழை புஸ்ஸலலாவை இந்து தேசிய கல்லூரியில் ( சீசீ கல்லூரி) காலை 9மணிக்கு நடைபெறும்.

மேற்கூறிய பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன்பெறலாம் .

கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை 0772277441 இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் ஏன ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புஸ்பராஜ் அக்கரப்பத்தனை                                                                                                                                              பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here