புசல்லாவ சங்குவாரி தோட்டத்தில் உள்ள மக்கள் கம்பளை, புசல்லாவ பிரதான வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளர்.கம்பளை உடபலாத்த பிரதேச சபைக்கு உட்பட்ட குப்பைகளை சங்குவாரி தோட்டத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி உடபலாத்த பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மேற்படி தோட்டத்தில் கொட்டப்படுவதால் சுகாதாரரீதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.