புசல்லாவ ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி பிரிவில் தொடர் மழை மற்றும் காற்று காரணமாக மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது, இதில் இருந்து மின்சாரம் பாய்ந்து 28 வயதில் கலு என்று அழைக்கப்படும் எஸ். அருனசாந்த என்ற இளைஞன் மரணமானார்.
தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் சிரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர், இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்க கூடும்.
இந்த மரணம் தொடர்பான ப விசாரனைகளை கம்பளை விசேட பொலிஸ் பிரிவினரும் புசல்லாவ பிரேத பரிசோகர் மேற்கொண்டு புசல்லாவ வைத்தியசாலைக்கு பிரேதம் எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை புசல்லாவ பொலிசார் மேற்கொண்டு வரும் அதே வேளை இறந்த இளைஞன் சித்தசுவாதீனம்
அற்றவர் என தெரியவருகின்றது.
பா.திருஞானம்