பூகோள விவ­சாய மேம்­பாட்­டுக்­காக இடம்பெ­றும் நடன நிகழ்வு அட்­டனில்!

0
120

உலக வாழ் விவசாயத்தை மேம்படுத்தவும் விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் உலகை ஈர்க்கும் வண்ணம் உலகளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள பரத நாட்டிய நடன நிகழ்வு இலங்கையில் அட்டன் நகரில் இடம்பெறவுள்ளது.

0510

இந்த நிகழ்வை ஐக்கிய இராச்சியத்தை தலைமையகமாகக்கொண்ட UDEAR என்ற அமைப்பு ஆசிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பாடு செய்துள்ளது. மேற்படி நாடுகளில் 31 ஆம் திகதி மாலை 3 மணிக்கு இந்த நடன நிகழ்வு இடம்பெறுகிறது. இதில் ஆசிய ஐரோப்பா நாடுகளைச்சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்குபற்றுகின்றனர். இந்த நடன நிகழ்வானது சரியாக 11 நிமிடங்களைக்கொண்டது. இலங்கையில் அட்டனில் இடம்பெறும் நிகழ்வு 31 ஆம் திகதி டன்பார் மைதானத்தில் இடம்பெறுகிறது.

இதற்கான நடன கலைஞர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இந்த நிகழ்வுக்கான இணைப்பாளராக நுவரெலியா லைசியம் சர்வதேச கல்லூரியின் நடன ஆசிரியர் டி.சசிகரன் விளங்குகிறார். அட்டனில் இடம்பெறும் நடன நிகழ்வை நடன ஆசிரியை ராஜசுலோச்சனா நெறிபடுத்துகிறார்.

12

இந்த நிகழ்வின் நடனம் தொடர்பான ஒளிப்பதிவுகள் இந்நிகழ்வில் பங்குபற்றும் சகலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் படி பயிற்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்நிகழ்வின் விசேட அம்சம் என்னவெனில் வயது,இனம், பால் வேறுபாடு இன்றி ஆர்வம் உள்ள அனைவரும் பங்கு பற்றலாம். அட்டனில் இடம்பெறும் நிகழ்வில் சுமார் 350 பேர் பங்கு பற்றுகின்றனர்.

இதில் 5 வயது முதல் 50 வயது வரையான கலைஞர்கள் பங்குபற்றுவது முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்வுக்கென பிரத்தியேக நடன ஆடைகள் எதுவும் இல்லை என்பது முக்கிய விடயம். நடன பயிற்சிக்கென கலைஞர்கள் பயன்படுத்தும் சாதாரண உடைகளையே பயன்படுத்தலாம். ஒரே நாளில் ஒரே நேரத்தில் உலகின் பல நாடுகளில் சுமார் பத்தாயிரம் கலைஞர்கள் ஒரே பாணியிலான நடனத்தை ஆடுவது கின்னஸ் சாதனையில் பதிவாவதற்கு மட்டுமன்றி இன்று இந்தியா உட்பட பலநாடுகளில் நலிவடைந்து வரும் விவசாயத்தை உலக அளவில் மேம்படுத்தும் ஒரு அம்சமாக இந்த நிகழ்வு விளங்கவுள்ளது. இந்நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதோடு கின்னஸ் சாதனைக்காக இந்நிகழ்வு அனுப்பி வைக்கப்படவும் உள்ளது. மேற்படி நிகழ்வை காண ஆர்வமுள்ள அனைவரும் அன்றைய தினம் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசமாகும்.

எஸ் .சதீஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here