ஈஸ்டர் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதி, மொஹமட் இம்சதீன் ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதலை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்காமையின் ஊடாக, தமது கடமைகளை செய்ய தவறியதாக பூஜித் ஜயசுந்தர மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.