பூண்டுலோயாவில் 2100கிலோகிராம் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது!!

0
128

கம்பளையில் இருந்து பூண்டுலோயா பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு 2100 கிலோகிராம் கழிவு தேயிலை தூள் கொண்டு சென்ற லொறி ஒன்றையும் சந்தேக நபர் ஒருவரையும் தலவாகலை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர் .இந்த சம்பவம் 23.05.2018.புதன் கிழமை காலை 11மணி அளவில் இடம் பெற்றதாக தலவாகலை விஷேட அதிரடிபடையினரர் தெரிவித்தனர் .

குறித்த கழிவு தேயிலை தூள் அனுமதி பத்திரம் இன்றி லொறி ஒன்றில் ஏற்றி சென்ற போது குறித்த லொறி வண்டியை தலவாகலை விஷேட அதிரடி படையினர் நிறுத்தி பரீசோதித்த போதே இந்த கழிவு தேயிலை தூள் மீட்கபட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாகவும் குறித்த கழிவு தேயிலை தூள் பொலித்தின் உறையினால் பொதிசெய்யபட்டிருந்ததாக விஷேட அதிரடிபடையினரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

1 7

கைது செய்யபட்ட சந்தேக நபரும் கைபற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் சந்தேகநபரை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பூண்டுலோயா பொலிஸார தெரிவித்தனர்

பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here