பூனை கடித்ததால் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

0
28

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது பூனை கடித்ததன் காரணமாக இடது காலில் ஏற்பட்ட காயத்தினால் கிருமி தொற்றுக்கு உள்ளான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தல்பே கிழக்கில் வசிக்கும் எழுபத்தைந்து வயதுடையவராவார்.உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று முனதினம் (13ம் திகதி) காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்னவினால் நடைபெற்றது.

உயிரிழந்த பெண் வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கியபோது வீட்டுப் பூனை இடது காலில் கடித்துள்ளது. அவர் இதை அதிகம் கவனிக்கவில்லை, பின்னர் அவருக்கு காய்ச்சல் வந்தது. ஹபராது களுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 28-02 கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13-03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையை காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி டி. சி. .பிரியநாத் மேற்கொண்டார்.சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட மரண விசாரணை அதிகாரி, பூனை கடித்ததால் ஏற்பட்ட காயத்தில் இருந்து கிருமிதொற்று ற்பட்டதால் மரணம் சம்பவித்ததாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here