பூஸ்டர் டோஸாக ‘சினோபார்ம்’ தடுப்பூசி

0
106

பைசர் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால், சினோபார்ம் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்தாண்டு நாட்டில் கொரோனா தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதுவரை கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

1.8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் தங்களிடம் இருப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமிதா கினிகே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆறு மில்லியன் பேர் இதுவரை பூஸ்டர் டோஸ் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில் கொவிட் -19 தொற்றுக்கள் சிறிதளவு அதிகரித்துள்ள போதிலும் இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கொவிட்-19 வகைகளை நாட்டிற்குள் நுழைவதை அதிகாரிகளால் தடுக்க முடியாது ஆனால் அதை தாமதப்படுத்தவே முடியும்.

எனவே சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும்.

தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 17.14 மில்லியன் மக்கள் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், 14.72 மில்லியன் பேர் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

8.2 மில்லியன் மக்கள் மாத்திரமே மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

202,571 பேர் இரண்டாவது பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here