பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலி அறுப்பு- சந்தேக நபர் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

0
100

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த பெண் ஒருவரை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற ஒருவர், பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தொடுத்து தப்பி ஒடிய நபரை பொது மக்கள் மடிக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் இரண்டாம் குறுக்கு வீதியில் சம்பவதினமான நேற்று மாலை பெண் ஒருவர் மரக்கறிகளை கொள்வனது செய்துவிட்டு மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பின்னால் பிறிதொரு மோட்டர் சைக்கிளில் வந்த ஒருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த 2 அரை பவுண் எடை கொண்ட தங்க சங்கிலியை அறுத்தொடுத்து தப்பி ஓடியுள்ளார்.

சந்தேக நபரின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தையும் அவரின் அடையாளம் கண்டு கொண்ட பெண் உடனடியாக தனது மகனுக்கு தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து குறித்த பெண்ணி மகன் மற்றும் அங்கிருந்த அவனது நண்பர்கள் மோட்டர்சைக்கிளில் சென்ற சந்தேக நபரை வழிமறித்து மடக்கி பிடித்து கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைதான சந்தேக நபர் வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர் எனவும், அபகரித்த தங்க சங்கிலியை வீதியில் வீசியுள்ளதாகவும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

வீதியில் வீசிய தங்க சங்கிலியை பொலிஸாரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் தேடிய போதும் எதுவும் கிடைக்கவில்லை

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 8 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here