டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 03 பிரிவு தோட்டத்தில் 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் தேயிலை மலையில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வீட்டு தேவைக்காக விறகு கொண்டுவர சென்ற ஒரு பிள்ளையின் தாயான சுந்தரலிங்கம் மல்லிகா (வயது 58) என இணங்காணப்பட்டுள்ளது.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம பிரதேச வைத்தியசாலையில் பிரே அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரப்பத்தனை நிருபர், க.கிஷாந்தன்