உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் எஸ்.ஜி.புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த வருடம் டிசம்பர் 26 முதல் 30ஆம் திகதி வரையில் அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டம் 2017 இன் விதிகளின்படி 2023 பெப்ரவரி பிற்பகுதியில் தேர்தல் நடத்தப்படும்.
வேட்புமனு தாக்கல் முடிந்து ஐந்து வாரங்கள் முதல் ஏழு வாரங்கள் வரை உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த காலம் குறிக்கப்பட்டுள்ளது