பெருந்தோட்டங்கள் கைவிடப்படுவதால் வெளிநாடு செல்லும் மலையக பெண்களின் தொகை அதிகரிக்கும் அபாயம்!

0
120

பெருந்தோட்ட கம்பனிகளின் பொறுப்பிலுள்ள பெருந்தோட்டங்கள் அல்லது அரசு நிறு;வனங்களுக்கு கீழ் உள்ள தோட்டங்களில் பயிர் செய்கைக்கு உட்பட்ட தேயிலை மலைகள் துப்பரவு செய்யப்படாமல் கைவிடப்படுகின்றமை தொடர்பாக பலரும் பேசி வருகிறார்கள்.
கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது கூட இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றது என்றாலும் நிலைமையை சீர்படுத்த தொழிற்சங்கங்களோ , அல்லது மலையக அரசியல் தலைவர்களோ அதிக அக்கறை எடுத்ததாக தெரிவில்லை. இவ்வாறு தேயிலை தோட்டங்கள் முடப்படுகின்ற போது தொழிலாளர் வேலையிழந்து, வேலைநாட்கள் குறைவுபட்டு அவர்கள் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்ற விடயம் பற்றி மட்டுமே அனைவரும் பேசுகிறார்கள்.

இவ்வாறு தோட்டங்கள் மூடப்பட்டு அல்லது கைவிடப்பட்டு வேலையிழப்பு ஏற்படும் போது அல்லது வேலைநாட்கள் குறைவு படும் போது அதனால் பாதிக்கப்படுபவர்களுக்காக மாற்று வேலைவாய்ப்பு இல்லாவிட்டால் அவர்களுக்கு இருக்கும் மாற்று வழி என்ன என்பதை எவரும் ஆக்கபூர்வமாக சிந்திக்கவில்லை. அண்மைக்கால புள்ளி விபரங்களின் படி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பெருந்தோட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் பொதுவாகவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் 90 சதவிகிதமானவர்கள் பயிற்சி பெறாத வீட்டுப்பணிப்பெண்களாகவே இருக்கின்றனர் என்பதையும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

இந்த பின்னனியில் தோட்டங்கள் மூடப்படும் போது அல்லது வேலை நாட்கள் குறையும் போது மாற்று தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் பெருந்தோட்ட பெண்கள் தங்களுக்குள்ள ஒரே ஒரு மாற்று வழியாக வெளிநாட்டில் பணிப்பெண்களாக தொழில் பெறுவதே என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள்.

தற்போது எந்தவித நியாயப்படுத்தப்படாத காரணமும் இன்றி தோட்டங்கள் மூடப்படுவது அல்லது வேலைநாட்கள் குறைக்கப்படுவது பெருந்தோட்ட பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கு நிர்பந்திப்பதற்கு ஒரு மறைமுக முயற்சியாக இருக்கலாம் என இந்த துறையில் நிபுனத்துவம் வாய்ந்தவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறும் பெருந்தோட்ட மக்களுக்கு விசேடமாக பெண்களுக்கு அரசு சேவைகள் இதுவரை ஒழுங்காக கிடைக்காத நிலையில் பெருமளவில் பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டால் அது பெருந்தோட்ட சமூகத்திற்கு பெரும் பாதிக்பாக அமையக்கூடும்.

பெருந்தோட்ட பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதில் இருந்து தடுத்து நிறுத்துவோம் என அரசியல் வாதிகள் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. பல வருடங்களுக்கு முன்னரே பெருந்தோட்ட பகுதிகளில் பயிரிடப்படாத காணிகள் 37இ000 ஹெக்டா நிலம் இருப்பதாக அடையாளாம் காணப்பட்டது தற்போது அந்த எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கும் சூழலே காணப்படுகிறது.

இந்த பின்னனியில் தற்போதுள்ள பாரதூரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் மாற்றுத் தொழில்வாய்ப்புக்களை தரும் தொழிற் பேட்டைகளை அமைத்தல் , பெருமளவானவர்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுக்ககூடிய கைத்தொழில் துறைகளை ஆரம்பிக்க முதலீட்டாளர்களை ஊக்குவித்தல், சுயதொழில்களை ஆரம்பிபதற்காக வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருதல் போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்ககைகள் எடுப்பது குறித்து மலையக அரசியல் வாதிகள் நவடிக்கை எடுப்பதோடு மலையக புத்திஜீவிகள் இந்த விடயம் தொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முன்வரவேண்டும்.

தோட்டங்கள் மூடப்படுவது, வேலைநாள் குறைப்பு என்பவற்றின் நீண்ட கால விளைவுகளை வெறுமனே குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அதனால் விளையும் பாரதூமான பின்விளைவுகளை குறித்து நீண்ட கால கண்ணோட்டத்தோடு பார்க்காவிட்டால் திட்டமிடப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்னும் மாயையில் நமது மக்கள் சிக்கி சின்னாபின்னமாவதை தடுக்க முடியாமல் போகும்.

“பெருந்தோட்டங்கள் கைவிடப்படுவது, மூடப்படுவது, பாராமரிக்கமல் விடப்படுவது மக்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவதற்கு ஊக்குவிப்பதற்கான ஒரு மறைமுக திட்டத்தின் பகுதியாக இருக்கலாம்” என பிரிடோ நிறுவன தலைவர் திரு. மைக்கல் ஜோக்கிம் இவ்வாறு தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here