பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், போசணை வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, நான்கு மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில், பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, காலை ஆகாரமாக, ஊட்டச்சத்துள்ள பிஸ்கெட்டுகளை வழங்குவதற்கு, சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, பெருந்தோட்டச் சிறுவர்களின் போசணை மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் மட்டும், தோட்டப்புறச் சுகாதார நிலையங்களுக்கு, மில்லியன் கணக்கிலான திரிபோஷா பக்கெட்டுகள் விநியோகிக்கப் பட்டுள்ளனவென, சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.