இலங்கைக்கு முதுகெலும்பாகவும், உந்துசக்தியாகவும், அமைந்தவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தான். இருப்பினும் அவர்களின் வாழ்வாதாரத்தில் வளர்ச்சியடையாது 200 வருடகால வரலாற்றில் அவர்களது வாழ்வியல் முன்னோக்க அல்ல, பின்னோக்கி பார்க்கின்ற நிலைமைக்கு ஆளாகி வருவது குறித்து தாம் வேதனை அடைவதாக சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் துங்லால்மார்க் தலைமையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுடன் நடைபெற்ற தொழிற்சங்கங்கள் ஒன்று கூடலின்போது சட்டத்தரணி கா.மாரிமுத்து மேலும் அங்கு பேசுகையில்:-
காலம் காலமாக தோட்டங்களை நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை உற்பத்தியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு தமது வாழ்வாதாரங்களில் போதியளவு வேதனம் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது யாவரும் அறிவர்.
தேயிலை உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு புளுP10 க்கு உள்வாங்கி அதன் ஊடாக தொழிலாளர்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார்.
தற்போதைய சூழ்நிலையில் கூட்டு ஒப்பந்த சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட சம்பளமோ அல்லது சம்பள நிர்ணயசபை மூலம் நிர்ணயிக்கப்படும் வேதனமோ வாழ்க்கை செலவுக்கு ஏற்றதாக இல்லை. எனவே இவர்களது நிலைமையை நன்கு ஆராய்ந்து எதிர்காலத்தில் அவர்களது தொழில் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு புளுP10 சலுகைகளை பெருந்தோட்ட தேயிலை தொழில் துறைக்கும் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென்று சட்டத்தரணி கா.மாரிமுத்து மேலும் கேட்டுக் கொண்டார்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா