பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக கடன்!

0
114

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2500 ரூபா வீதம், இரண்டு மாத இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்கள் திறைசேரியிடம் இருந்து கடனை பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவகையில் குறைந்தவட்டியுடன், ஒரு பில்லியன் ரூபாவை கடனாக பெறவுள்ளதாகவும், பெருந்தோட்ட நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கான உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரவுசெலவு திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியாருக்கான நாள் ஒன்றுக்கு 100 ரூபா அதிகரிப்பு என்ற அடிப்படையிலேயே இந்த 2500 ரூபா கொடுப்பனவை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

இந்த நிலையில் அரச வங்கிகளின் ஊடாக இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் எப்போது இந்த கடன் வழங்கப்படும் எனும் தகவலை அவர் வெளியிடவில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தகவல்களின் படி இந்தக்கொடுப்பனவானது ஒரு கிழமைக்குள் வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here