பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள இன,மத அரசியல் தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

0
63

200 வருடங்கள் பெருந்தோட்ட சமூகத்தின் முழுமையாக பெறப்படாத கல்வி,சுகாதாரம்,பொருளாதாரம்,காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் தெளிவுபெரும் வகையில் கருத்து பறிமாற்ற நிகழ்வு ஒன்று நேற்று (01) திகதி நுவரெலியா செட்டிக்கஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் தேசிய ரீதியாக பெருந்தோட்ட சமூகம் கல்வி, சுகாதாரம், காணி, வீட்டுரிமை, மற்றும் பொருளாதார போன்ற விடயங்களை அடைவதற்கு எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதனை தீர்ப்பதற்கு எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பாகவும் அதனை இதன் போது ஊடகவியலாளர்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு பட்ட பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக பரந்த அளவில் கலந்துரையாடப்பட்டன.

பெருந்தோட்ட சமூகம் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 200 வருடங்களாக பங்களிப்பு செய்து வருகின்ற மக்கள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் முழுமையாக பெறமுடியாததன் காரணமாகவும் அவர்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கு இந்த உரிமைகள் சமமாக பங்கிடப்பட வேண்டும் ஆனால் அவ்வாறு கிடைப்பதில்லை அதற்கு சட்டங்கள் மற்றும்,கொள்கைள் தடையாக உள்ளன.இதனை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதனை உணர்ந்து செயப்படுவதே முக்கியமானது.

இதனை அனைத்து இன மக்களும் உணர்ந்து செயப்படுவதற்கு முன்வர வேண்டும். என்ற நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது இக்கலந்துரையாடலில் பதுளை பண்டாரவளை,நுவரெலியா பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர.

இதன் போது வளவாளராக அருட் தந்தை மைக்கல் ராஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் கலந்து கொண்டிருந்தார்.
அரசியல் தொழிற்சங்கம்,கட்சி,இனம் மதம் மொழி பேதமின்றி அனைவரது ஒத்துழைப்பும் பெற்று தேசிய ரீதியில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாடளவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் மற்றும் சிங்கள ஊடக வியலாளர்கள் தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அருட் தந்தை டெஸ்மன் பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு,அருட் தந்தை.நிவ்மன் பீரிஸ்,இணைப்பாளர் சஜித் சில்வா பெருந்தோட்ட பிரிவு இணைப்பாளர்,சவரிநாதன் நிக்கலஸ்,உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கான அனுசரனையினை கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here