பெருந்தோட்ட மக்களுக்கு 4ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி!!

0
181

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக 4ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதில் 1136 வீடுகள் பூர்த்தியாகியுள்ளன. எஞ்சியுள்ள 2836 வீடுகளின் நிர்மாணப்பணிகள் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்தவருடம் மே மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பெருந்தோட்டமக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணப்பதற்கான நிதியுதவியை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக பொருத்தமான காணிகளை அடையாளங்காணும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முன்னனெடுக்கப்படவுள்ளது.

ஒரு வீட்டுக்காக 10 இலட்சம் ரூபா வீதம் பெருந்தோட்ட மக்களுக்கான 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகயில் கைச்சாத்திடுவதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here