200 வருடங்களுக்கு மேலாக காணியுரிமையும் வீட்டுரிமையும் பெறுவதற்காக பொறுமையிழந்து காத்திருந்த பெருந்தோட்ட மக்களின் காணி வீட்டுரிமைபெறும் கனவை நனவாக்குவதற்கு அமைச்சர் திகாம்பரம் அடித்தளமிட்டமை
மலையக மக்களின் சரித்திரத்தில் ஒரு புதிய திருப்பமாகும். என துதித்தோட்டத்தின் அருட் தந்தை ஞானராஜ் தெரிவித்தார்.
இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களுக்கு இணையாக பெருந்தோட்ட மக்களும் சரி நிகராக வாழக்கூடிய உறுதியுடன் காணி மற்றும் வீட்டுரிமை பெறுவதற்கான வாய்ப்பினை ஆரம்பித்துவைத்திருக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்மைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பாராட்டகுறியவர்.
மலையக மக்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதல் முறையாக பயனாளிகளுக்கு முறையான தரமுள்ள காணி மற்றும் உறுதிப்பத்திரத்திரம் கிடைத்துள்ளது.
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சு அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் அமைச்சரிடம் தெரிவித்ததாவது பெருந்தோட்டபகுதிகளில் பல முக்கியமான புராதன பெருமைமிக்க இடங்கள், கட்டிடங்கள் வியாபார நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு அழிந்துபோகும் நிலை உள்ளதால் இதனை பாதுக்காக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இதன் போது கேட்டுக்கொண்டார்
மேலும் அமைச்சர் என்ற அடிப்படையில் அனைத்து மத இன மக்களை அரவணைத்து அனைவருக்கும் பொதுவான சேவையை முன்னெடுத்து வருவது நல்ல முன்னுதாரணமாகும் என்பதையும் அருட் தந்தை ஞானராஜ் சுட்டிக்காட்டினார்.
இந்தசந்திப்பின் போது அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அமைச்சின் ஆலோசகர் திரு. வாமதேவனும் பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம் நிகழ்ச்சித்திட்ட இயக்குனர் எஸ்.கே சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
அக்கரப்பத்தனை நிருபர்.