நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பெருந்தோட்டம் சார்ந்த வைத்தியசாலைகளை மத்திய மாகாண சுகாதார அமைச்சி உரிய முறையில் நிர்வகிக்காததால்; நோயளர்கள் பெரும் அளவில் பாதிப்பு அடையும் நிலைமை உருவாகி உள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மகாண சபையில் காட்டம் சாட்டமாக சுட்டிக் காட்டி உள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய சபையில் மத்திய மாகாண சபை உறுப்பினர். மலையத்தில் காணப்படும் வைத்தியசாலைகளில் தொழில் புரியும் ஊழியர்கள் உட்பட வைத்தியர்களில் பெரும்பாலோனார் பிர மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான நியமனங்கள் கிடைத்தவுடன் இங்கு வருவார்கள் பின்னர் எவரையாவது பிடித்துக் கொண்டு தங்களது பிரதேசங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் மீண்டும் இந்த பிரதேசங்களில் வெற்றிடங்கள் தோன்றுகின்றனர்.
இருப்பவர்களும் ஏனோதானோ என்று தனது கடமைகளை தற்போது மேற்க் கொள்கின்றனர். இதனால் அப்பாவி பெருந்தோட்ட மக்கள் நாளாந்தம் செத்து மடிகின்றனர். வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்களுக்கான உரிய பராமறிப்பும் குறைந்து வருகின்றது. வைத்தியர்கள் உட்பட ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. இருப்பவர்களுள் சிலர் நோயாளர்களை முறையாக கவனிப்வர்களாக இல்லை. இதனாலும் நோயாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக லிந்துல்ல வைத்தியசாலையில் பாரிய குறைபாடுகள் காரணமாக நோயாயர்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலை அன்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கபட்டது. சகல வசதிகளும் கொண்ட இந்த வைத்தியசாலையில் தற்போது அதிதீவிர கிகிச்சை பிரிவு தாதியர் போதாமை காரணமாக ஆரம்பிக்கபடாமல் இருக்கின்றதுசுமார் நான்கு இலட்சம் பேர்சனத்தொகையை கொண்ட அட்டன் பிரதேச மக்கள் பயன் அடைய கூடியதாக அமைக்கபட்ட இந்த வைத்தியசாலையில்; 80 வீதமானோர் பெருந்தோட்ட தொழிலாளர்களாவர். இந்த வைத்தியசாலையில் உள்ள அனைத்து பிரிவுகளும் முறையாக இயங்க வேண்டுமானால் 104 தாதியர்கள் வேண்டும். அனால் தற்போது 60 தாதியர்கள் மாத்திரம் உள்ளனர். இன்னும் 44 தாதியர்கள் பற்றாகுறை இதனை இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினார்.
பா.திருஞானம்