மக்களை ஏமாற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை பெறும்பான்மை இனத்தை சேர்ந்த மக்கள் எவ்வாறு வாழுகின்றார்களோ அதேபோல் சிறுபான்மையினரும் வாழவேண்டும். மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் அமைச்சர் திகாம்பரம்
மக்களை ஏமாற்றும் நோக்கம் எங்களுக்கு கிடையாது எனவும் பெறுபான்மை மக்களை போல் சிறுபான்மை மக்களும் வாழவேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார் .
மஸ்கெலியா மொக்கா தோட்ட த்தில் 16வருடகாலமாக புனரமைக்கபடாத காட்மோரில் இருந்து மஸ்கெலியா டி.சைட் வரையான வீதிக்கான அடிகல்லும் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மனிதவள அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, பிரதேச்சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் உறையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் இம் முறை இடம் பெற்ற மேதினத்திற்கு அனைவரும் ஒன்று கூடி உங்களுடைய பலத்தினை எங்களுக்கு வழங்கினீர்கள். அதேபோல் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் இடம் பெறவிருக்கின்ற தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு நாங்கள் விட்டில் இருந்துவிடகூடாது .
அமைச்சராக இருக்கின்ற எவரும் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். நான் அமைச்சராக இருந்து கொண்டு சொல்லுகின்றேன் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் இடம் பெறுகின்ற பெறுந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை விடயத்தில் எமது மக்களை கம்பணி காரர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட உள்ளவர்கள் மக்களை ஏமாற்றுவது நிச்சயம். மக்கள் அடுத்த மாதத்தில் இருந்து நியாயமான சம்பளத்தினை தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டுமானால் வீதிக்கி இறங்கி போறாட வேண்டும்.
இம் முறை தேயிலையின் விலை அதிகரித்து காணபடுகிறது. ஆகவே அனைத்து மக்களும் கட்சி பேதங்கள் இன்றி கம்பணி காரர்களுக்கு எதிராக போராட நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இன்று நல்லவிடயங்களை செய்யும் போது அதனை ஏற்று கொள்ள வேண்டும். நான் மற்றவர்களை போல் கால்நடை அபிவிருத்தி அமைச்சரோடு பேசி கோழிகுஞ்சுகளை வழங்கி நான் மக்களை ஏமாற்றவில்லை. அமைச்சர் என்ற ரீதியில் லயன் குடியிருப்புகளை ஒழித்து தனி வீட்டு திட்டத்தினை மேலும் அதிகாரிக்க வேண்டுமென தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)