பெற்றோரின் மூடநம்பிக்கையில் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த நிலை! யாழில் சம்பவம்!

0
107

யாழ்.நாவாந்துறை பகுதியில் குழந்தையின் வயிற்றோட்டத்தை நிறுத்த, பெற்றோர் ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் 8 மாத குழந்தை சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டதினையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று, பூஜை செய்து, நூல் கட்டியுள்ளனர்.

இருப்பினும், குழந்தைக்கு வயிற்றோட்டம் நிற்காத காரணத்தால், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை குழந்தையை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து நேற்று இடம்பெற்ற குழந்தையின் மரண விசாரணையில் வயிற்றோட்டம் காரணமாக அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளமை அறிக்கையிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here