பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியானது

0
108

புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சம்பள ஊதியம் பிரச்சினை காரணமாகவே இவ்வாறு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், கொலை செய்யப்பட்டவர், கெலேதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த விராஜ் லியனகே (30 வயது) எனப்படும் இளைஞர் என தெரியவந்துள்ளது.

மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இளையவரான விராஜ், இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்று கொழும்பில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

விராஜ் மற்றும் குறித்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த அவருடைய நண்பர் ஆகிய இருவரும் பணியாற்றிய உணவகம் 3 மாதங்களுக்கான சம்பளம் வழங்காமல் பணியிலிருந்து நிறுத்திய நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நட்டஈடு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தினால் அவர்களுக்கு எதிராக கருவாத் தோட்டம் பெரிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு, விருந்தகத்தின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

உயிரிழந்த நபர், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்று திரும்பும் போது உந்துருளியில் பயணித்த இருவரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, உயிரிழந்த நபரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here