பொகவந்தலாவ ஆல்டி கிழ்பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த
எட்டு பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் 31. 08. 2017 வியாழகிழமை காலை 11மணி அளவில் இடம் பெற்றதாக பாதிப்புக்குள்ளான தொழிலாளா்கள் தெரிவிக்கின்றனா்.
குளவி கொட்டுக்கு இலக்கான எட்டு பெண் தொழிலாளா்களுள் ஒரு பெண் தொழிலாளருக்கு அதிகமான குளவிகள் தாக்கியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளா் ஒருவா் தெரிவித்தாா்.
தேயிலை தேயிலைச் செடியின் கீழ் இருந்த குளவி கூடு கலைந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.
பொகவந்தலாவ நிருபா்
எஸ். சதீஸ்