பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க!

0
116

திருட்டு ஐ .தே.க வேட்பாளர்கள் .திருடர்களை நம்பி மோசம் போக வேண்டாம் ரொசல்லை மக்களே
(வேட்பாளர் மெல்கம் தெரிவிப்பு)

பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க றொசல்லை தொகுதி வேட்பாளர்.

தன்னுடைய தகவல்களை உண்மைக்கு புறம்பாக காட்டி தேர்தலில் பொய்யான வழியில் போட்டியிடும் ஐ.தே.க.வேட்பாளரின் திருட்டுத்தனம் அம்பலமாகியுள்ளது. றொசல்ல தொகுதியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு முன்னனியின் வேட்பாளர் தங்கராஐா பிரசாத் என்பவரின் சொந்த இடம் தலவாக்கலை ஆகும் எனினும் தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னை றொசல்ல தொகுதியை சேர்ந்தவர் என்ற பிழையான ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வரும் விடயம் தெரிய வந்துள்ளது. போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது உண்மயைான தகவல்களை வழங்க வேண்டும் எனினும் இவர் தனது முகவரியை பிழையாக வழங்கியுள்ளமை சட்ட விரோதமாகும்.

இவர் வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் பார்க்கும் போது இவர் வழங்கியுள்ள முகவரியானது மிகவும் பொய்யாகும். அதை விட இவருடயை முகவரியானது எனது சொந்த வீடு அமைந்துள்ள கிராமத்தின் முகவரியாகும் பல்வேறான திருட்டு குற்றங்களுடன் மக்களிடம் ஓட்டுக் கேட்டு வரும் திருட்டு கூட்டணியான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களின் திருட்டுத்தனத்தை மக்களிடம் படம் போட்டு காட்டுகின்றது.

IMG-20180131-WA0007

FB_IMG_1517503693024
இப்படியான தில்லு முல்லுகளுடன் வளம் வரும் இவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றால் என்னவெல்லாம் செய்வார் என்பதை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு முன்னரும் பல சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிரசாத் அவர்களின் இந்தச் செயல் வண்மையாக கண்டிக்கத் தக்கதாகும்.

இவரின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பான சட்ட நடவடிக்ககைளை எடுக்கவும் நான் தயாராகவுள்ளேன்.

 

சிவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here