நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் எடிட் பிரதேசத்தில் 09.07.2018 அன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டுள்ளனர்.நோட்டன் பகுதியிலிருந்து பிரயாணிகள் பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து மீது எடிட் பிரதேசத்தில் மூங்கில் தோப்பு ஒன்று சரிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேரூந்து மீது சரிந்து விழ்ந்த மூங்கில்கள் பேரூந்தின் முன் பகுதி கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு மூங்கில் உள்நுழைந்ததால் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பலத்த காற்று வீசுகின்ற இந்த வேளையில் பிரதான வீதியின் அருகில் உள்ள மூங்கில் தோப்பு ஒன்றே இவ்வாறாக சரிந்து பேரூந்து மீது விழுந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)