பொகவந்தலாவயில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
125

பொகவந்தலாவ பேனோகோட் தோட்ட வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .இந்த சம்பவம் 20.05.2018.ஞாயிற்று கிழமை விடியற்காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இவ்வாறு சடலமாக மீட்கபட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான நிர்மலா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

குறித்த வீட்டில் கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராரு இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மரணவிசாரனைக்காக அட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கபட்டு இது கொலையா அல்லது தற்கொலையா என்பதனைஅறிந்து கொள்வதற்காக சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here