பொகவந்தலாவ பிரதேசத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையக தேசிய முன்னணி கட்சி நிவாரணப் பொருட்களை வழங்கியது.
பொகவந்தலாவ செல்வந்த, கொட்டியாகல, பொகவான மற்றும் குயினா ஆகிய தோட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்டன பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டுள்ளது.
மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தலைமையிலான குழுவினர் இந்த நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
தலவாக்கலை பிரதேச வர்த்தகர்களிடமிருந்து ஒரு தொகுதி பொருட்கள் திரட்டப்பட்டதுடன், கட்சியினால் மற்றுமொரு தொகுதி பொருட்கள் திரட்டப்பட்டு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மலையக தேசிய முன்னணியின் தலைமையக் காரியாலயத்தில் இந்த பொருட்கள் பொதியிடப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர், பிராந்திய தலைவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.