பொகவந்தலாவையில் தமிழ் முற்போக்கு கூட்டணி பெண் வேட்பாளரை கேவலப்படுத்தி அநோமதய சுவரொட்டிப் பிரச்சாரத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு
இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே பெண்களுக்கு வேட்பாளர்களாக போட்டியிடும்
சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த பின்னனியில் மலையக பகுதிகளில் பண்களை வேட்பாளர்களாக போட்டியிட வைப்பதற்கு கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது.
வேட்பாளர்களாக களம் இறங்கினால் ஏற்கனவே பெண்களுக்கு வாய்ப்பளிக்க முன்வராத மலையக சமூகத்தில் பெரும் சவால்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொண்டே பெண்கள் வேட்பாளர்களாக களம் இறங்க முன்வந்தார்கள். இந்த பின்னனியில் பொகவந்தலாவை பகுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் பெண் வேட்பாளரை பாலியல் ரீதியாக கேவலப்படுத்தி அநோமதிய சுவரொட்டிகளை ஒட்டும் பிரச்சாரம் ஒன்றை மாற்றுக் கட்சியினர் செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிராக சொல்லக்கூடிய ஒரே குற்றச்சாட்டு அவர்களின் நடத்தையை கேவலப்படுத்துவது மட்டுமே. இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பெண் வேட்பாளருக்கு எதிராக பாலியல் ரீதியான இவ்வாறான அவதூறு பிரச்சாரம் மூலம் முழு மலையக பெண்களையும் கேவலப்படுத்தும் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த கோழைத்தனமான செயல் ஒட்டு மொத்த ஆண்கள் சமூகத்திற்கும் அவமானமாகும் பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது. அவர்கள் அவ்வாறு அரசியலுக்கு வந்து விட்டால் இது வரை அரசியலில் இருந்து கொண்டு தாங்கள் செய்து வந்த தரம் கெட்ட அரசியல் செயல்பாடுகளை செய்ய முடியாது என்று சம்பந்தப்பட்டவர்கள் பயப்படுவதனாலேயே பெண் வேட்பாளருக்கு எதிராக இவ்வாறு முதுகெழும்பில்லாத முறையில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆகவே இவ்வாறு கோழைத்தனமாக செயல்பட்டு பெண்களை இழிவு படுத்தும் முதுகெழும்பில்லாத சமூக விரோதிகளை இந்த தேர்தலில் தோற்கடிப்பது அவசியமாகும். தங்கள் சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்களை மதிக்கும் ஆண்கள் சவால்களுக்கு மத்தியிலும் சமூகத்திற்கு சேவையாற்ற முன்வரும் பெண்களுக்கு வாக்களிக்க முன்வரவேண்டும். பெண்களே விழிப்பாக இருந்து பெண்களை கேவலப்படுத்தும் இந்த சமூக விரோதிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் முகமாக பெண் வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெண்களை அவமதிக்கும் அற்பர்களையும் அவர்களின் அடிவருடிகளையும் தோற்கடிக்க வேண்டும் என கோருகிறோம். போகவந்தலாவை பகுதயில் தமிழ் முற்போக்கு கூட்டணி.
வேட்பாளரை பாலியல் ரீதியாக கேவலப்படுத்தி அநோமதய பிரச்சாரத்;தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு கடும் கண்டணம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பொகவந்தலாவை பெண்கள் உரிமை பேணும் அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
அக்கரப்பத்தனை நிருபர்