பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் ஒரு தொகை கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பகுதியில் புனரமைக்கப்படுகின்ற மின்சார நிலையத்தில் பணிபுரியும் நபர் ஒருவரே கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றையடுத்து மேற்படி நபரை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி நபர் பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது, சந்தேக நபரை இன்று அட்டன் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ நிருபா்
எஸ்.சதீஸ்.