மீண்டும் புத்துயிர் பெறுமா பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்ட பிரஜாசக்தி நிலையம் .
நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் இயங்கி வந்த பிரஜாசக்தி நிலையத்தின் நிலையே இது கடந்த அரசாங்கத்தின் போது மலையகம் முழுவதும் அமைக்கபட்ட பிரஜாசக்தி நிலையங்களில் இதுவும் ஒன்று பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் உள்ள பிரஜாசக்தி நிலையம்.
இந்த பிரஜா சக்தி நிலையத்தில் தனது கணணி அறிவினை பொகவந்தலாவ பகுதியில் உள்ள அனேகமான பாடசாலை மாணவர்கள் நன்மை பெற்று வந்த போதிலும் இந்த பிரஜாசக்தி நிலையத்திற்கு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ள பட்ட கல்வீச்சி சம்பவம் தொடர்பில் பெகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்ட பிரஜாசக்தி நிலையம் கைவிடபட்டதாக பிரதேசமக்களும் பாடசாலை மாணவர்களும் குற்றம் சுமத்துகன்றனர் .
குறித்த நிலையம் கைவிடபட்டு சுமார் 10வருடங்கள் கடந்துள்ள போதிலும் இந் நாட்டின் நல்லாட்சி உருவாக்கபட்டு இந்த இரண்டரை வருடகாலபகுதியில் பொகவந்தலாவ பிரஜாசக்தி நிலையம் எமது மலையக அரசியல்வாதிகளின் கண்ங்களுக்கு தென்படாமை குறித்து இப்பிரதேச மக்கள் பெரிதும் கவலையிடுகின்றனர்.
ஆனால் தற்பொழுது இந்த பிரஜாசக்தி நிலையத்தில் உள்ள ஜன்னல்கள், மற்றும் கதவுகள் நீர்தாங்கிகள், மின்சார உபகரணங்கள், போன்ற பல உபகரணங்கள் இனந்தெரியாதவர்களால் களவாடபட்ட நிலையில் குறித்த கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணபடுவதாகவும் பிரதேசமக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேலை குறித்த கட்டிடத்தினுள் சட்டவிரோதமான முறையில் மாணிக்க்கல் அகழ்வுகளை மேற்கொள்வதற்கும் இந்த கட்டிடத்தினை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் இம் மக்கள் தெரிவித்தனர் .
எனவே இந்த பிரஜாசக்தி நிலையம் தொடர்பாக பலதடவை மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இது குறித்து எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளபட வில்லையெனவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர் .
மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணபடும் இந்த பிரஜாசக்தி நிலையத்தினை மீண்டும் இயங்க வைக்க சம்பந்த பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென பொகவந்தலாவ மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)