எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இ.தொ.கா. தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தையும் வாழ்வாதார வாக்குசீட்டுக்களையும் அரசியலாக்காது .
பொகவந்தலாவ பிரச்சார கூட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பிணர் கணபதி கனகராஜ் .
தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தையும் வாழ்வாதார வாக்கசீட்டுக்களையும் எந்த ஒரு சந்தர்பத்திலும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அடக்குவைத்து அரசியலாக்கது என இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் குறிப்பிட்டார்.
07.02.2018. புதன் கிழமை மாலை பொகவந்தலாவ கொட்டியகலை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்ரசின் இறுதி தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில் தனியார் ஊழியர்களுக்கு 2500ரூபா வாங்கி தருகிறோம். என கூறி வேலை செய்யும் நாள் ஒன்றுக்கு 100ரூபா படி இரண்டு மாதத்திற்கு மாத்திரம் வாங்கி கொடுத்து எமது தொழிலாளர்களுக்கு துரோகம் நினைத்த துரோகிகள் .
நீங்கள் தான் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினையை அரசியல்மயமாக்கி நிலுவை பணத்தை வேண்டுமென கூறி கையொப்பத்தையும் வைத்து கொடுத்ததால் தான் எமது மக்கள் 88000ரூபா நிலுவை பணத்தை இன்று இழந்து தவிக்கிறார்கள் .
பொகவந்தலாவ நகரம் வீரத்திற்கு ஒரு பெயர் போன மாநாகரம் இந்த நகரம் பல்வேறு தியாகிகளை உறுவாக்கியிருக்கிறது பல்வேறு தியாகங்களையும் செய்து இருக்கிறது.
இன்று இந்த தேர்தலை வைத்து கொண்டு மலையகபிரதேசத்திற்கு பல்வேறு பட்ட பிரமுகர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள் ஆனால் அந்த வாக்குரிமையை பெற்று கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்ரஸ் .
ழூன்று வருடங்களுக்கு முன்பு எமது மக்கள் வாக்களித்த நல்லாட்சி என்று சொல்லபடுகின்ற அரசாங்கத்தை எமது மக்கள் கல்லாட்சி யென எமது மக்கள் ஆரியாசனம் ஏற்றிவிட்டார்கள்.
ஆனால் மக்கள் வக்களித்து அனுப்பிய அரசாங்கம் முதலில் வேட்டு வைத்தது தோட்ட தொழிலாளர்களுடைய சம்பளத்திற்கு மிக நீண்டகாலமாக இலுபட்ட சம்பள பிரச்சினையை இ.தொ.கா. தீர்க்க முற்பேட்ட போது பல திடுக்கிடும் வேலைகளை மாற்று கட்சியினர் செய்து விட்டு இன்று வந்து கூறுகிறார்கள் பல சாதனைகளை செய்துவிட்டதாக குறிப்பிடுவதாக தெரிவித்தார் .
நான் இந்த வீடமைப்பு திட்டத்தினை பற்றி கட்டாயம் கூறவேண்டும் நான் இன்று பொகவந்தலாவ கொட்டியாகலை மண்ணில் இருந்து பேசுகிறேன் எனக்கு சாட்சி சொல்ல எனது முன்னால் ஓட்டை வீடுகளும் உடைந்த வீடுகளும் இருக்கின்றன இந்த விடயத்தினை தலவாகலையிலே, நுவரெலியாவிலே, இராகலையிலே பேசவில்லை. எந்த மண்ணில் உடைந்த வீடுகளில் எமது மக்களை தள்ள நினைக்கிறார்களோ அந்த மண்ணில் நின்று பேசுவதாக குறிப்பிட்டார் .
இங்கு அமைக்கபடுகின்ற வீடுகளுக்கு அத்திவாரம் ஈடுவதற்கு கமிஷன் , புளக்கல் அடிப்பதற்கு கமிஷன், கூரைதகரங்கள் அமைப்பதற்கு கமிஷன் ,10இலட்ச்சம் மென கூறும் இந்த வீடமைப்பு திட்டம் 05இலட்சம் ரூபா கூட பெறுமதியில்லை இதில் ஐந்து இலட்சம் ரூபா அரசாங்கபணமும் ஐந்து இலட்சம் ரூபா எமது மக்கள் பெறும் கடன் , இது போன்ற கமிஷன் எல்லாம் கொள்ளையடித்து விட்டு ஐந்து இலட்சம் ரூபா வீட்மைப்பு திட்டத்தை எமது மக்களின் தலையில் கட்டபார்கிறார்கள் யெனவும் கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு ஜனாதிபதி அவர்களால் ஒரு குழு நியமிக்கபட்டது. அது தான் பினைமுறி மோசடி குழு இதில் பிரதமந்திரி ரணில் விக்ரமசிங்க,பிரதமமந்திரியின் பிரதான ஆலோசகர், ரவிகருணாநாயக்க, மலிக்சமரவிக்ரம, மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோர் தேனீர் அருந்திய மறுநாள் 11000ஆயிரம் கோடி ரூபா கொள்ளையிடபட்டது அதில் தோட்ட தொழிலாளர்களுடைய 8500மில்லியன் ரூபாவை ஜக்கிய தேசிய கட்சி கொள்ளையடித்து விட்டதாக ஜனாதிபதியும் ஜனாதிபதியின் பினைமுறி விசாரனைகுழுவும் சொல்லுவதாக குறிப்பிட்டார்.
ஆனால் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்ணன் கூறுகிறார் தோட்ட தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாபநிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் எவரும் கொள்ளையடிக்க வில்லையென நான் ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னண் அவர்களுக்கு கூறுகிறேன் முடியுமானால் தோட்ட தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் ஜக்கிய தேசிய கட்சி கொள்ளையடிக்க வில்லையென ஜனாதிபதி அவர்களை கொண்டு வந்து கூற சொல்லங்கள் என சவால் விட்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதிஸ்