பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் மகனை அடித்து கொலை செய்த தந்தையும் மருமகனும் கைது!

0
116

பொகவந்தலாவ பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யபட்டுள்ள தாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 08.03.2018.வியாழகிழமை இரவு 08மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

20180308_235018

ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறி தந்தையும் மருமகனும் இனைந்து தடியால் தாக்கியமை காரணமாக மகன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இருவர் இணைந்து குறித்த நபரை தலைபகுதியில் கடுமையாக தாக்கியமையால் அதிகமான இரத்தம் வெளியேறிமையின் காரணமாக குறித்த நபர் மரணித்தள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

உயிர் இழந்தவர் 37வயதுடைய ஆறுமுகம் சிவசூரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

20180308_231613

கொலை செய்யபட்டவரின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு அட்டன் நீதிமன்ற நீதவானின் மரணவிசாரனையின் பின்னர் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

தாக்குதல் நடத்திய 72,மற்றும் 23வயதுடைய இரண்டு சந்தேகநபர்களும் 09.03.2018.வெள்ளிகிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்த உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here