பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது.
பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 24.03.2018.சனிக்கிழமை விடியற்காலை 04.30மணி அளவில் இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே இவர்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் மாணிக்ககல் இல்ல வகைகளையும் பொலிஸார் கைபற்றியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலாவ ஆரியுபுற பகுதியை சேர்ந்த ஒருவரும் பொகவானை தோட்டபகுதியை சேர்ந்த ஒருவருமே கைது செய்யபட்டவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களும் 24.03.2018. சனிக்கிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜபடுத்துவற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)